ஈ – நாகர்கோவில் > இன்று
அலோபதி மருத்துவத்துக்கு இணையாக இந்திய மருத்துவத்தின் தரம் உயர வேண்டும், குலசேகரத்தில் பெல்லார்மின் எம்.பி. கூறினார்.
இந்தியாவில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு கைவினை பொருட்கள் உற்பத்தியாகிறது என்று, அதிகாரி கூறினார்.
முளவிளை கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கடந்த 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 31-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.
தமிழ்ப்பெயர் என்று கூறிக்கொண்டு தமிழை கொச்சைப்படுத்தும் பெயர்களை தமிழ் திரைப்படங்களுக்கு வைப்பதா? என்று தமிழ்நல எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
சுசீந்திரம் கோவில் 3-ம் திருவிழாவான இன்று (புதன்கிழமை) இரவு ‘மக்கள்மார் சந்திப்பு’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாம்பழத்தாறு அணை கட்ட ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, ரெஜினால்டு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மையத்தில், பெரியாரின் 33-வது நினைவு தின கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி, வேலையில்லா காலத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
குளச்சல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுனாமி இரண்டாவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கடலோரக் கிராமங்களில் மௌன ஊர்வலங்களும், ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டம், கோமான்விளையில் ‘லெவன் போர்ட்ஸ்’ கிரிக்கெட் சங்கத்தின் 8-வது ஆண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி மறுவாழ்வுப் பணிகளுக்காக ரூ.2.46 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் சுனில்பாலிவால் தெரிவித்தார். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மார்த்தாண்டம் பகுதியில் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பி.வி.விஜயகுமரன் தெரிவித்தார்.
நாட்டின் ஐஸ்வர்யத்துக்காக சுசீந்திரத்தில் 2-வது முறையாக நடைபெறவுள்ள 1 லட்சத்து 8 திருவிளக்கு பூஜைக்கான கூப்பன் வெளியீட்டு நிகழ்ச்சி சுசீந்திரத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் தேசிய பசுமைப் படை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த 3-நாள் முகாம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
சுங்கான்கடை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை (டிச.27) நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், பிற்பகல் 12.30 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. மாலை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டக் கலை மன்றம் சார்பில் வழங்கப்படும் 2006-07-ம் ஆண்டுக்கான விருதுக்கு 5 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் ரூ.45 கோடி செலவில் கேபிள் கார் அமைக்க நடைபெற்று வரும் பணிகள், இன்னும் 18 மாதங்களில் நிறைவு பெறும் என, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றது. இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. இதற்கான தங்க அங்கி நேற்று சன்னிதானம் வந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் புகழ்பெற்ற கன்னியாகுமரி சுற்றுலா மையம் பயணிகள் வெள்ளத்தில் திணறி வருகிறது. தங்குவதற்கான இடம் கிடைக்காமல் பயணிகள் திண்டாடும் நிலை இப்போதே ஏற்பட்டு விட்டது. புத்தாண்டு தினத்தில் சுமார் 2 லட்சம் பயணிகள் கன்னியாகுமரியில் குவிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வில் அனுபவ சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment